Monday 10 August 2020

 

சிங்கம் (Lion)

Lion | Smithsonian's National Zoo

              சிங்கம் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. தமிழில் ஆண் சிங்கத்திற்கு அரிமா என்று பெயருண்டு. ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும். பிடரியை உளை என்றும் உளை மயிர் என்றும் கூறுவதுண்டு. சிங்கமானது பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது. பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது.



வாழிடமும் இயல்புகளும்

Lion Behaviour -Social Organisation and behaviour of the lion | ALERT

          சிங்கம் அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க்காடுகளில் வாழ்வதையே விரும்பும். சிங்கங்கள் நல்ல கேட்கும் திறன் கொண்டவை மேலும் இதன் கர்ஜனை சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்கள்) வரை கேட்கும் திறன் கொண்டது. பூனை இனத்தில் உள்ள விலங்குகளில் சிங்கம் கூட்டமாக வாழும் இயல்புடையது. மான்பன்றி முதலான விலங்குகளை வேட்டையாடி உண்ணும். பெரும்பாலும் பெண் சிங்கங்களே வேட்டையாடும். வேட்டையாடிய விலங்குகளை முழுவதுமாக உண்ணாமல் எலும்பு அதனையொட்டிய சதைப்பகுதிகளை அப்படியே விட்டுவிடும். அதனால் மற்ற விலங்குகள் (ஓநாய், கழுதைப் புலி முதலானவை) எஞ்சியவற்றை உண்டு வாழ்கின்றன.

            சிங்கங்களின் வாழ்நாள் பொதுவாக பத்திலிருந்து பதிநான்கு ஆண்டுகள் வரை இருக்கும். ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 வருடங்களும் பெண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 16 வருடங்களும் ஆகும். உடற்கூற்றின் படி இரு பாலிங்களும் ஆயுட்காலத்தில் சர்வ வல்லமை படைத்திருந்தாலும், ஒரு கூட்டத்தில் ஒரு வயது முதிர்ந்த ஆண் சிங்கமே இருக்க வேண்டும் என்பதால் தலைவனான ஆண் சிங்கம் 10 வயது வருவதற்குள்ளாகவே அக்குழுவில் உள்ள மற்ற இளைய சிங்கத்தோடு சண்டையிட்டு இறக்கவோ அதிக காயத்திற்குள்ளதாகவோ ஆக்கப்படுகிறது. மேலும் கூட்டத்தில் இருந்து விரட்டப்படும் போது தன் வயது முதிர்ச்சியாலும், நகங்களும் பற்களும் கூர்மை இழப்பதாலும் வேட்டையாடுவதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. இதனால் அதிக ஊட்டம் அளிக்கக் கூடிய கொம்புடைய உயிரிகளையோ மற்ற பெரிய விலங்குகளையோ வேட்டையாட முடியாமல் போகிறது. இத்தனை வலிமை இழந்த சிங்கம் மிகவும் ஒல்லியாகவும் பலவீனமாகவும் இருப்பதால் வேட்டையாடப்படும் எளிய விலங்குகளாலேயே சில சமயங்கள் கொல்லப்படுகின்றன. ஆனால் பெண் சிங்கம் வயது முதிர்ச்சி அடைந்தாலும் கூட்டத்தில் ஒன்றாகவே இருக்கும். இதன் காரணத்தாலேயே ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை விட சராசரி ஆயுட்காலத்தை குறைவாகக் கொண்டுள்ளது.
(more details)wikipedia

No comments:

Post a Comment

Ads

  குதிரை(Horse) குதிரை  (வகைப்பாட்டியல்: Equus ferus caballus , ஆங்கிலம்: horse),  பாலூட்டி  இனத்தைச் சேர்ந்த ஒரு  தாவர உண்ணி . குதிரை, பாலூ...