மான்(Deer)
மான் பாலூட்டி வகையைச் சேர்ந்த இரட்டைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. அறிவியலில் மான் இனத்தை செர்விடீ (Cervidae) என்பர். இவை இலைதழைகளை உண்ணும் இலையுண்ணி விலங்குகள். மான் ஆடு மாடுகள் போல உண்ட உணவை இருநிலைகளில் செரிக்கும் அசைபோடும் விலங்குகள் வகையைச் சேர்ந்த விலங்கு. மான்கள் உலகில் ஆஸ்திரேலியாவும் அண்டார்டிக்காவும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும். மான்களில் புள்ளிமான், சருகுமான், சம்பார் மான், கவுரிமான் என நிறைய வகைகள் உள்ளன. கனடாவிலும் சைபீரியா முதலிய வடநிலப் பகுதிகளிலும் வாழும் மூசு அல்லது எல்க் என்னும் காட்டுமான் தான் உலகிலேயே மிகப்பெரிய மான் இனம் ஆகும். இவற்றின் ஆண் மூசு, 2 மீட்டர் உயரமும் 540 – 720 கிலோ.கி (1200–1600 பவுண்டு) எடையும் உள்ள மிகப்பெரிய விலங்காகும்.
மான்களில் பொதுவாக ஆண் மான்கள் மட்டுமே அழகான கொம்புகளைக் கொண்டிருக்கும். கொம்புகள் கிளைத்து இருப்பதால் ஆண்மானுக்கு கலை என்று பெயர் பெண்மானுக்கு சிறிய கொம்புகளோ அல்லது அவை இல்லாமலோ இருக்கும். பெண்மானுக்குப் பிணை என்று பெயர். மானின் குழந்தைக்கு (குட்டிக்கு), மான்மறி என்று பெயர்.
உணவு
மான்கள் இலை தழைகளையே முதன்மை உணவாகக் கொள்கின்றன. இவற்றின் வயிறு சிறிதாகவும் மற்ற அசைபோடும் விலங்குகளைப் போல சிறப்பமைப்புகளைப் பெறாமலும் உள்ளது. மேலும் இவற்றுக்கு ஊட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படுகிறது. எனவே மாடு செம்மறி ஆடு போன்ற விலங்குகள் உண்பதைப்போல சத்துக்குறைவான நார்ச் சத்து நிறைந்த உணவை இவை தின்பதில்லை. சத்து நிறைந்த துளிர்கள், புற்கள், பழங்கள் போன்றவற்றை உண்கின்றன. இவற்றின் கொம்பு வளர்ச்சிக்கு கால்சியமும் பாசுப்பேட்டும் மிகவும் தேவையாக இருக்கிறது.
(more details)wikipedia
No comments:
Post a Comment