மாடு (Cow)
மாடு (ஆங்கிலத்தில் cattle என அழைக்கப்படும்) அல்லது பசு (பசு என்பது மாட்டின் பெண்ணினத்திற்கு வழங்கும் பொதுவான பெயர்)பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. பசுவினுடைய பால் பல சத்துக்கள் நிறைந்ததுள்ள காரணத்தினால் மனிதன் அதனை ஒரு முக்கிய உணவாகக் கொண்டுள்ளான். மனிதன் இம்மாடுகளின் இறைச்சியையும் உணவாகப் பயன்படுத்துகிறான்.
இனங்கள்
மாடுகள் பொதுவாக மூன்று பாரிய பிரிவுகளாகக் காணப்படுகின்றன, அவற்றில் ஒரு வகையானது போஸ் டாரஸ் (Bos taurus) என்பதாகும், இது ஒரு வகை ஐரோப்பிய இன எருதாகும் (ஆபிரிக்க மற்றும் ஆசிய மாடுகளுக்கு ஒத்தது). இரண்டாவது வகை மாடானது போஸ் இண்டிகஸ் எனும் விஞ்ஞானப் பெயரைக்கொண்ட காங்கேயம் காளை (ஆங்கிலத்தில் zebu) என்பதாகும். மூன்றாவது வகை மாடானது ஒரொய்ச் (aurochs) என்பதாகும் இவ்வகை மாடுகள் உலகில் இருந்து அழிந்துவிட்ட ஒரு இனமாகும். இவையே மேலே குறிப்பிட போஸ் டாரஸ் மற்றும் காங்கேயம் காளை இனங்களின் மூதாதைய இனமாகும். சமீபத்தில், மாடுகளின் போஸ் டாரஸ் மற்றும் காங்கேயம் காளை இனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் மூவகை இனமாடுகளையும் ஓரின மாடுகளாகச் சேர்த்துவிட்டனர். எனினும் குழுவாக்கப்பட்ட ஓரினம் தற்போது இவ்வாறு Bos primigenius taurus, Bos primigenius indicus,Bos primigenius primigenius பிரிக்கப்பட்டுள்ளது.
(more details)visit wikipedia
No comments:
Post a Comment